நீட் தேர்வு! தமிழகத்திற்கு பெரும் குண்டை தூக்கி போட்ட மத்திய அரசு! அதிர்ச்சியில் தமிழகம்!  - Seithipunal
Seithipunal


மருத்துவ படிப்புகளுக்கு, இந்தியா முழுவதும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு நிலையில், அதனை எதிர்த்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி 2 மசோதாக்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருந்தது. 

நடைபெற்று முடிந்த ஆட்சியின் போது மத்திய அரசிடம், தமிழக அரசு மசோதா குறித்து கேட்டபோது, மசோதா இன்னும் என்னுடைய மேசைக்கு வரவில்லை என பதிலளித்த மத்திய அமைச்சர்களும் உண்டு. பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிராகரிக்கப்பட்ட தகவலை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடைபெற்று முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது, தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு தமிழகத்திற்கு விலக்கு அளிக்காமல் நிராகரித்திருப்பது தமிழக அரசியல் கட்சிகள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும். இனி என்ன செய்ய போகிறது தமிழகம்? 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet exam tamilnadu bills rejected by central govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->