தமிழகத்தில் அடுத்த வருடமும் நீட் தேர்வு ரத்து இல்லை.?! ஸ்டாலின் பதிலால் அதிர்ச்சி.! வெளியான பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வரும், அதிமுக.,வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "நீட் தேர்வு ரத்து என்பதற்கான சட்டப் போராட்டத்தை அரசு துவக்கிவிட்டதாகவும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க.வும், அதன் நட்புக்குரிய சமூக நீதி இயக்கங்களும் இறுதி வரை போராடும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்து இருப்பதை பார்க்கும்போது, இந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வராது என்பது சூசகமாகத் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன், அ.தி.மு.க. என்ன வழியை பின்பற்றியதோ அதே வழியைத்தான் தி.மு.க.வும் பின்பற்றி இருக்கிறது. அதாவது ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இந்த வாதத்தை அ.தி.மு.க. முன்வைத்தால், இதற்காக குழுவை அமைத்து, அதன் பிறகு தான் சட்டமுன் வடிவினை நிறைவேற்றினோம் என்று தி.மு.க. கூறக்கூடும். ஆனால் இந்த குழுவிற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது. இது அரைத்த மாவையே அரைப்பதற்கு சமம். வெறும் சம்பிரதாயத்திற்காக இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள்.

அடுத்தபடியாக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். 1996-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை, நடுவில் 13 மாதங்கள் தவிர, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தி.மு.க.வின் தயவில்தான் மத்திய அரசுகளே இருந்தன.

அப்போதெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசி, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத தி.மு.க. இப்போது மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில், கல்வியை மாநில பட்டியலில் திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப்பிடிப்பதற்கு சமம்.

தற்போது தி.மு.க. கூட்டணிக்கு 38 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் வர உள்ளன. இந்த சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினைச் செய்யவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet exam issue ops war to dmk govt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->