நீட் தேர்வு ரத்து.! திமுக எம்.பி.,க்கு மத்திய அரசு அளித்த உறுதியான பதில்.! - Seithipunal
Seithipunal


கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று, மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் நோய்த்தொற்று பரவலின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இரண்டாவது அலையின் போது நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இதனையடுத்து ஊரடங்கு தளர்வு குறைக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. நுழைவுத் தேர்வுகள் பலவும் தள்ளி வைக்கப்பட்டன.  நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே கொரோனா 3வது உருவாகும் என்று பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா மூன்றாவது அலை காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரவீன் பரதி பதில் அளித்துள்ளார்.

இன்று மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இணை அமைச்சர் பிரவீன் பாரதி, "கொரோனா நோய் பரவலின் மூன்றாவது அறை அச்சுறுத்தல் காரணமாக, நீட் தேர்வு உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet exam issue central govt reply to dmk mp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->