#BigBreaking : நிறைவேறியது நீட் மசோதா.! வெளிநடப்பு செய்த முக்கிய கட்சியின் எம்எல்ஏ.,க்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 13 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் சட்டப்பேரவை கூடியது. 

இன்று சட்டப்பேரவை கூடியதும் நீட் தேர்வு தொடர்பாக திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தாக்கல் செய்து பேசுகையில், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திமுக அரசு, தொடக்கத்திலிருந்தே திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வலிமையான சட்ட முன்வடிவை பேரவையில் முன்மொழிகிறேன் என தெரிவித்தார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார். அப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பாஜக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet Exam against bill in tn assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->