நாட்டின் மிகமுக்கிய விவகாரம்., பிரதமர் மோடி தமிழில் போட்ட பரபரப்பு ட்வீட்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டும் எதிர்க்கட்சிகள் தங்களின் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு செவிசாய்க்காத மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

வேளாண் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து விவசாயிகளின் போராட்டம் அந்தந்த மாநிலங்களில் துவங்கி, இந்திய தலைநகரம் வரை பரவியுள்ளது. மேலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் வேளாண் சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 

இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்." என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi tamil tweet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->