ஏன் இப்படி அடிமையா இருக்கீங்க? தமிழக போலீசை திட்டிய நந்தினி, நிரஞ்சனா.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து, துண்டு பிரச்சனைகளை விநியோகித்த சட்டக் கல்லூரி மாணவிகள் நந்தினி, அவரின் சகோதரி நிரஞ்சனாவை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்துக்கு வந்த சட்டக் கல்லூரி மாணவிகள் நந்தினி, நிரஞ்சனா ஆகியோர், "பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த 10 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டு, துண்டு பிரச்சனைகளை வழங்கினர்.

இதனை அறிந்த பாஜகவினர் மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசருக்கு தகவல் அளித்து, மாணவி மிகு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

இதனை எடுத்த சம்பவத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவிகளை கைது செய்ய முற்பட்டனர். அப்போது மாணவி நிரஞ்சனா போலீசாரை பார்த்து, "நீங்கள் ஏன் இப்படி அடிமையாக இருக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

அந்நேரம் பாஜகவினர், "நீங்கள் சீனாவிடம் காசு வாங்கிக்கொண்டு பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பி கொண்டிருக்கிறீர்கள்" என்று குற்றம் சாட்டினர். பின்னர் மாணவிகளை போலீசார் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nanthini niranjana arrest issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->