அரசுபஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி மாணவ மாணவியர்கள் அவதி! 7 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் அவலம்! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பயிலும் கிராமத்து மாணவ, மாணவிகள், காலையில் பள்ளிக்கு வர அரசு பஸ் வசதி இல்லாததால், 7 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள்  மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது. கடந்த 1951ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இப்பள்ளியில், ராசிபுரம் சுற்றி 15 கி.மீ தூரம் வரை உள்ள கிராமங்களை சேர்ந்த  2,500 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

இப்பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வருகின்றனர் 

இந்த சூழ்நிலையில், காலை மாலை நேரத்தில் மாணவர்கள் அவர்களது ஊர்களிலிருந்து   பள்ளிக்கு வந்து செல்ல அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 
 
இது தொடர்பாக அந்த பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கையில், இந்த பகுதியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் பள்ளியில் 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். 

மாணவர்களுக்கு அரசு வழங்கிய பஸ் பாஸ் இருந்தும், பள்ளி நேரத்தில் வந்து செல்ல கிராமத்தில் இருந்து பேருந்துகள் இல்லை. பேருந்துகள் இயக்க கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை.  மாணவர்களுக்காக, அவர்கள் பள்ளிகள்  வரும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். 

English Summary

Namakkal Near - No Government Bus Angry Students


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal