தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றும் முயற்சியில் திமுக அரசு?.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையை மறைக்க திமுக அரசு காரணங்களை தேடிக்கொண்டு இருப்பதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். 

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, " தமிழகத்தில் கடந்த சில வாரமாக தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாதமாக நடைபெறவில்லை என்பதால், மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவதாக திமுக அரசு தெரிவிக்கிறது. 

காற்றாலை மின்சாரம் 3000 மெகாவாட் கிடைத்தும் மின்தடை ஏற்படுகிறது என்றால், அவர்கள் மின்சார தடைக்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து முந்தைய அரசு மீது குறை கூறுவது சரியானது கிடையாது. 

சென்னை போன்ற நகர்களில் புதைவடை மின்கம்பிகள் வழியாகத்தான் பெரும்பாலும் மின்சாரம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் கடந்த 10 வருடமாக மின்மிகை மாநிலமாக செயல்பட்டு வரும் நிலையில், மின்தடை உள்ள மாநிலமாக மீண்டும் தமிழகத்தை மாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ? என்ற அச்சமும் எனக்கு எழுந்துள்ளது. மின்சார பிரச்சனையை சரி செய்யும் நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Former Minister Thangamani Pressmeet 20 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->