பாஜகவிலிருந்து விலகி திமுகவில் சேரப்போகும் மிகமுக்கிய நிர்வாகி.! அதிர்ச்சியில் தமிழக பாஜக.!  - Seithipunal
Seithipunal


திமுகவில் அதிதிருப்தில் இருந்து வந்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல் கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகியுள்ளார். இதனிடையே அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து மேலும் சில முக்கிய நிர்வாகிகளை திமுகவிலிருந்து பாஜக அழைத்துவர தமிழக பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திமுகவை சேர்ந்தவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுப்பதால், அதற்கு போட்டியாக பாஜகவிலிருந்து நயினார் நாகேந்திரனை இழுக்க திமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது பாஜக துணை தலைவராக பதவி வகித்து வரும் நயினார் நாகேந்திரன், தனக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்காத காரணத்தால் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவர் முருகன் நேரில் சந்தித்து சமாதானம் செய்த போதும் அவர் அதிருப்தியில் இருந்து நீங்கவில்லை. சமீபத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு நயினார் நாகேந்திரனை சந்தித்து திமுகவில் இணைவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்பட்டு விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக டெல்லி மேலிடத்திலிருந்து நயினார் நாகேந்திரனிடம் சமரசம் பேசி வருகிறார்களாம். அரசியல் சித்து விளையாட்டுகளை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nainar nagendran maybe join in dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->