பிழைக்க போன இடத்தில் அடங்கமறுத்து, அத்துமீறிய தமிழக கூலிபான்கள்.! மைசூர் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


மைசூர் கூட்டு பாலியல் வன்கொடுமை  வழக்கில் தமிழக கூலி தொழிலாளர்கள் 5 பேரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மைசூரில் 23 வயது மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவி மற்றும் அவரது காதலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் கும்பலை சேர்ந்தவர் தமிழில் பேசியதாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்த கொடூரத்தை செய்தவர்கள் தமிழர்கள் என்பது உறுதியானதால், சம்பவம் நடந்த பகுதியியல் இருக்கும் தமிழர்களை போலீசார் தேடினர்.

அப்போது, தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் கூலி வேலைக்காக பாண்டிபால்யாவுக்கு சென்றுள்ளனர். இது குற்றம் நடைபெற்ற இடமான ஆலனஹள்ளியிலிருந்து எட்டுலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவர்கள் 6 பேரின் செல்போன் சிக்னல் அந்த சம்பவ இடத்தில் இருந்ததை வைத்து குற்றவாளிகள் பிடிப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரம் பகுதியை சேர்ந்த பூபதி (வயது 28) என்ற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைமைறைவாக உள்ள மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் முக்கிய விவரம்: 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் சாமுண்டிமலை அடிவாரத்தில் லலிதா திரிபுரா பகுதியில், கடந்த 24 ஆம் தேதி கல்லூரி மாணவி காதலருடன் பேசிக்கொண்டு இருந்தார். இதன்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பலால் மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். காதலர் பயங்கரமாக தாக்கப்பட்டார். 

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் காதலர் அளித்த வாக்குமூலத்தில், " கடந்த 24 ஆம் தேதி நாங்கள் இருவரும் சாமுண்டி மலை அடிவாரத்திற்கு சென்றோம். அங்கு பாறை அருகே அமர்ந்து பேசினோம். அதன்போது, அங்கு வந்த 6 பேர் எங்களை சுற்றிவளைத்து கிண்டல் செய்தார்கள். இதனைதட்டிக்கேட்ட என்னை கற்களால் தாக்கினார்கள். 

இதனால் நான் சுயநினைவை இழந்து மயங்கினேன். மயக்கம் தெளிந்ததும் பார்த்தபோது காதலி இல்லை. 4 பேர் என்னைச்சுற்றி இருந்தார்கள். அவர்களிடம் காதலியை கேட்கையில், ரூ.4 இலட்சம் வீட்டில் இருந்து வாங்கி தர வேண்டும் என்று கூறினார்கள். அவர்களிடம் காதலியை காண்பிக்க கூறவே, அவர்கள் காதலியை என் முன் கொண்டு வந்தனர். அவரது உடலில் நகக்கீறல் இருந்தது, அவர் அழுதுகொண்டு இருந்தார். நிலைமையை உணர்ந்துகொண்டேன். 

இதற்குள் அவ்வழியாக பொதுமக்களில் சிலர் வந்ததால், எங்களை மர்ம நபர்கள் விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதன்பின்னர், பொதுமக்களின் உதவியுடன் நாங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்தோம் " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MYSURU case tamil people areest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->