மியான்மர்: எங்கு திரும்பினும் மரண ஓலம்., இராணுவ ஆட்சியின் கொடுர கொலை.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மியான்மர் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

அதுவும் சமீப காலமாக நாட்டில் போராட்டம் செய்பவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது.

மேலும், ராணுவ ஆட்சி அந்நாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆளும் கட்சி, எதிர்கட்சி, பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று மியான்மர் நாட்டின் மத்திய நகரில்  போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வன்முறை வெறியாட்டத்தை உடனடியாகக் கைவிட்டு, காயமடைந்தவர்களை சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

myanmar army attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->