உள்ளாட்சி தேர்தல் ரத்தானவுடன் ஸ்டாலினை திடீரென சந்தித்த அரசியல் கட்சி தலைவர்.!  - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தினை கூட்டியுள்ளது. 

சென்னை தி நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில்  டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடுளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் திடீர் சந்திப்பு. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம்  வாபஸ் வாங்கியதும் முத்தரசன், ஸ்டாலினை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்ததை அடுத்து தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற்று, இன்று மாலை புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mutharasan meet with mk stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->