தெருக்கள் பற்றி எரியும்... வெளியான எச்சரிக்கையால் மும்பையில் 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றம் காரணமாக, மும்பையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ளது.

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏகநாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த நேரத்திலும் சிவசேனாவின் தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் நிலவிவருகிறது.

மேலும் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் தெருக்களில் இறங்கி போராட தயாராகி வருவதாகவும், இதேபோல் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தற்போது வாபஸ் பெற்றிருப்பதால், மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தானே நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து, மும்பை தெருக்கள் தீப்பற்றி எரியும் என்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதன் காரணமாக தற்போது மும்பையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai 144 law june


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->