தமிழக பாஜக தலைவராக ஆர்.என் ரவியை நியமிக்கலாம்.. காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் யோசனை..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பதை தற்பொழுது தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் எழுப்பவில்லை.

பேரறிஞர் அண்ணா எழுப்பினார், அதன் பிறகு அவரும் தனது நிலையை மாற்றிக் கொண்டார். பிறகு எந்த அரசியல் கட்சித் தலைவரும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை எழுப்பவில்லை. தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என் ரவியை அதிலிருந்து நீக்கிவிட்டு தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம். ஏனென்றால் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்தும் பாஜகவின் கருத்தும் ஒரே மாதிரியாக உள்ளது" என விமர்சனம் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Thirunavukarasar said RN Ravi appoints as TNBJP President


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->