நான் சொன்னதால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.. முன்னாள் நடிகையின் பதிவால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்திற்கு கர்நாடக அணிகளில் இருந்து நாளொன்றுக்கு 855 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், மாண்டியா தொகுதி எம்பியும், முன்னாள் நடிகையுமான சுமலதா, தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்கள். அதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு அணைகளில் நீர் திறக்குமாறு ஒரு கடிதம் எழுதியதாகவும், அதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Sumalatha facebook post for cauvery water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->