நானா வாக்குறுதி கொடுத்தேன்? அம்மாவைப் போய்க் கேளுங்க..! – ஒரு எம்.பி-யின் அசராத ஸ்டேட்மெண்ட்…! - Seithipunal
Seithipunal


 

தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது மதுரை. இதனைச் சுற்றி உள்ள நான்கு பக்கங்களிலும் உள்ள ஊர்கள் மற்றும் மாவட்ட மக்கள் எல்லாம், வணிக மற்றும் பல் வேறு துறை சார்ந்த காரணங்களுக்காக மதுரைக்குத் தான் வருகின்றனர்.

தற்போது, மதுரையில் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். சென்னையை அடுத்து, மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்படுகிறது.

இந்த மதுரைத் தொகுதியின் எம்.பி-யாக இருப்பவர் கோபாலகிருஷ்ணன். இப்படி ஒருவர் மதுரைக்கு எம்.பி-யாக இருக்கிறார், என்பதை, மதுரை மக்களே சுத்தமாக மறந்து விட்டார்கள்.

2014-ஆம் ஆண்டு, ஜீப்பில் நின்று கை கூப்பி வாக்கு கேட்டதோடு சரி. அதன் பின், மதுரைப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. இவரைப் பார்க்க வேண்டும் என்றால், சென்னைக்கோ அல்லது டெல்லிக்கோ சென்று தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது, என்று அவரது கட்சித் தொண்டர்களே, கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த எம்.பி. தேர்தலின் போது, மதுரையில்  மோனோ மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும், என்று வாக்குறுதி அளித்திருந்தார். அது பற்றி தொகுதி மக்கள் கேட்டால், “நான் எங்கே வாக்குறுதி கொடுத்தேன்? அம்மா தான் கொடுத்தாங்க. அவங்களைப் போய்க் கேளுங்க, என்று சொல்கிறாராம்.

இதற்கிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தானே காரணம் என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால், இது 2015-ல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம். 2018 வரை இது பற்றி எந்த தகவலுமே தெரியாததால், மதுரை ஐகோர்ட் கிளையில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகே, தோப்பூர் என்று இடம் முடிவானது.

அடிக்கல் நாட்டியதோடு சரி. இதற்கான நிதி எதுவும் இன்னும் ஒதுக்கப்படவில்லை. வேலைக்கான டெண்டரும் வரவில்லை, என்று மதுரை மக்கள் சோகத்துடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.

எய்ம்ஸ் வருமா?

English Summary

M.P. statement against his promise for his area


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal