கிருஸ்துவ பிஷப் வீட்டில் கட்டுக்கட்டாக கோடி கணக்கில் பணம்! தப்பியோடிய பிஷப் தலைமறைவு! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் : ஜபல்பூர் கிருஸ்துவ மறைமாவட்டத்தின் பிஷப்-பாக இருந்த பி.சி.சிங் மீது, கல்வி நிறுவனங்களின் கட்டணங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.2.70 கோடியை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதன் அடிப்படியில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான பி.சி.சிங்யை தேடிவந்தனர். இதற்கிடையே கிடைத்த ரகசிய தகவலின்படி பிஷப் பி.சி.சிங் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக தெரியவந்தது. 

இந்நிலையில், பிஷப் பி.சி.சிங் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அதில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், கட்டுக்கட்டாக ரொக்கப்பணம், நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ரொக்கப்பணத்தில், ரூ.1 கோடியே 65 லட்சம், 18 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 118 பிரிட்டிஷ் பவுன்டுகளும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவரின் வெவ்வேறு 48 வங்கி கணக்குகள் மற்றும் ரூ.80.72 கோடி மதிப்புள்ள நகைகள் தொடர்பான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP EOW searches Bishops house in Jabalpur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->