அதிமுகவை ஆதரிக்கும் திமுக கூட்டணி கட்சி எம்.பி.! பொது மேடையில் நடந்த சுவாரசியம்.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் அரசு பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

அவர்களுடன் நாமக்கல் மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் பேசிய சின்ராஜ், ஏழை ஏழை மாணவர்கள் பயன் பெறக்கூடிய வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தான் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம். இது மகத்தான திட்டம் என்பதை மறுப்பதற்கு எதுவுமில்லை. அடிப்படை திட்டத்தை இன்றைய சூழ்நிலையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருவது. பாராட்டுக்குரியது மற்றும் வாழ்த்து கூறியது. 

பள்ளி மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாங்கி வருகிறார் என்று மேடையிலே பாராட்டினார். அவர் கூறியதை கேட்டு அதிமுகவினருக்கு ஆச்சரியமாக இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp chinraj says about tn cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->