பெண்கள் நிறைந்த மக்களவை! தமிழகத்தில் இருந்து மூன்று பேர்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 76 பெண்கள் எம்.பிக்களாக தேர்வு பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண்கள் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். இதில் பாஜக சார்பில் 47 பேரும், காங்கிரஸ் சார்பில் 54 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 24 பேரும் போட்டியிட்டனர்

இந்த பெண் வேட்பாளர்களில் பாஜக சார்பில் பிரக்யா சாத்வி, ஸ்மிருதி இரானி உட்பட 34 பேரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி கரூரில் வெற்றி பெற்ற ஜோதிமணி ஆகியோரும், பகுஜன் சமாஜ் சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சுயட்சையாக நின்ற 222 பெண் வேட்பாளர்களில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட  நடிகை சுமலாதா மட்டும் வெற்றி பெற்றார். ஏற்கனவே எம்.பியாக இருந்த 41 பேரில் சோனியா காந்தி, ஹேம மாலினி உட்பட 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் திமுக சார்பில் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி ஆகியோர் செல்கின்றனர்.  

English Summary

most women in parliment


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal