மத உணர்வுக்கு அளிக்கப்பட்ட மதிப்பு..! உற்சாகத்தில் நன்றி கூறிய மோடி..!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுக்கு விசா இல்லாமல் தங்களுடைய புனித தளத்திற்கு சென்று வழிபட சீக்கியர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

சீக்கியர்கள் கடவுளாக வழிபடும் குருநானக்கின் 550-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நன்னாளில் குருநானக்கின் புனித தலமாக கருதப்படும் கர்தார்ப்பூருக்கு சீக்கியர்கள் சென்று வருவது வழக்கம். 

imran khan seithipunal

இந்த இடமானது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த புனித தளத்திற்கு சென்று வர விசா இல்லாமல் அனுமதி வழங்கியுள்ளார். இன்று குருத்வாராவில் நடைபெற்ற கர்தார்பூர் செல்லும்  விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி வழிபாடு செய்தார். 

அதன்பின்னர் மக்களிடையே உரையாற்றிய மோடி, "இந்திய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளித்து பாகிஸ்தானிற்கு சென்றுவர அனுமதித்த இம்ரான்கான்க்கு நன்றி." என தெரிவித்தார். மேலும் 550 வது குருநானக் விழாவினை சிறப்பிக்கும் வகையில் புதிய நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi thanks to imrankhan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->