வெற்றிவேல்., வீரவேல்... மாஸ் காண்பித்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக - பாமக - பாஜக - த.மா.க உட்பட பல கட்சிகள் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, " வெற்றிவேல் வீரவேல்.. தமிழக முதல்வர், துணை முதல்வர், பாஜக கட்சியினர், கூட்டணி கட்சியினர், கட்சியின் வேட்பாளர்கள், எனது தம்பிகள் மற்றும் தங்கைகளான தமிழக மக்களே.. வணக்கம். தமிழகத்தின் மிகப்பழைமையான நகரத்திற்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 

திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை கவுண்டர், காலிங்கராயன், பொள்ளன் போன்ற பலரை தந்த மண் இது. இந்திய தேசமே தமிழகத்தின் கலாச்சாரத்தை பார்த்து பெருமைகொள்கிறது. எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் இது. ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையில் பேசினேன். அதனை நான் நினைவுகூருகிறேன். 

இன்னும் ஒரு சில நாட்களில் நாம் புதிய சட்டமன்ற வேட்பாளர்களை தேர்வு செய்ய இருக்கிறோம். நாங்கள் தமிழக மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறோம். ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் மூலமாக உங்களிடம் வாக்குகளை சேகரிக்கிறோம். மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் உத்வேகத்தோடு உங்களுக்கு வளர்ச்சியை வழங்க தயாராக இருக்கிறோம். 

இப்பகுதி மக்கள் தாராபுரத்தில் இரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அது நிச்சியம் அமையும். தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் பிற படிப்புகள் இனி தாய்மொழியில் படிக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். அதற்கான செயல்பாடுகள் நடந்து வருகிறது " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Talks Start Vetrivel Veeravel in Dharapuram 30 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->