அயோத்தி தீர்ப்பு: பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6 ஆம் இறுதி விசாரணையை தொடங்கியது, கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தமானது 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலை கட்டலாம் என நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi says ayodhya case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->