நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர் !! எதிர்க்கட்சிகளுக்கு மோடி வைத்த உருக்கமான கோரிக்கை!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 300 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் கடந்த மே 30ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில், மக்களவை தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் வீரேந்திரகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார், இடைக்கால சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரேந்திர குமார், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இதன் பின்னர் 17 வது நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர் இன்று தொடங்கி தற்போது நடந்து வருகிறது, முதல் கூட்ட தொடர் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் தொடங்குகிறது, மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும்  எதிர்க்கட்சி தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியமானவை என மோடி தெரிவித்தார் 

இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அதிக பெண் எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர் என மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

English Summary

modi request to opposite parties


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal