மோடியின் அண்ணன் மகள் செய்த காரியத்தை கேட்டால் நீங்களே பாராட்டுவீர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி இவர் கடந்த வாரம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு அமிர்தசரஸில் இருந்து டெல்லி வந்த பின் ஆட்டோ மூலம் குஜராதி சமாஜ் பவன் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த இரு திருடர்கள் தமயந்தி பென் கைப்பையை அவரிடம் இருந்து பிடிங்கி சென்றுள்ளனர். 

இதையடுத்து கைப்பையில் 2 போன்கள், 56 ஆயிரம் ரூபாய் பணம், முக்கிய ஆவணங்கள் இருந்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார், அன்று மாலை தான் அகமதாபாத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ள இருப்பதையும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி உதவியோடு திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதையடுத்து, கைப்பையில் இருந்த 56 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் 2 மொபைல் போன்களை மீட்டனர், மேலும் இந்த திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதனிடையே, காவல் நிலையத்தில் புகாரளித்த பெண் தான் பிரதமர் மோடியின் சகோதரர் மகள் என்றோ, பிரதமர் மோடி குடும்பத்தை சேர்த்தவர் என்றோ தங்களிடம் கூறவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் அரசியல் குடும்பத்தை சேர்த்தவர்கள் காவல் நிலையம் சென்றால் தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்துவது வழக்கம் ஆனால் பிரதமரின் அண்ணன் மகளாக இருந்துகொண்டு காவல் நிலையத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் மகள் என்றோ, பிரதமர் மோடி குடும்பத்தை சேர்த்தவர் என்றோ தங்களிடம் கூறாதது சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi relation robbery case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->