காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி எப்போது? எங்கு? எப்படி?.. முடிவை அறிவித்தார் மோடி.!! உலக நாடுகளுக்கு அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்தியா துணை இராணுவ வீரர்கள் சென்ற 70 வாகனத்தில், இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 க்கும் மேற்பட்ட இந்தியா துணை இராணுவர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பு தான் என்று இந்தியா அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்து உள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து தெரிவித்து, இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி அவர்கள், என் நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது, இந்த தாக்குதலுக்கு பதிலடி உறுதி, இதற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்தாக வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தார். மேலும் இந்தியா இராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் நடந்து மூன்று நாள்கள் கடந்து விட்ட நிலையில், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் என்ற கேள்வி இந்தியா மக்களிடம் மேலோங்கி உள்ளது. இந்நிலையில், இன்று இந்தியா வந்துள்ள அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி அவர்கள், பிரதமர் மோடியுடன் கலந்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் தெரிவிக்கையில், தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் தயங்க கூடாது. இதனையே ஜி-20 நாடுகள் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அர்ஜெண்டினாவும் கூட்டாக முடிவு செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அதற்க்கு ஆதரவு அளிப்பதற்கு சமம். 

பாகிஸ்தானு அளிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இனிமேல் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.. நம் இனி செயலில் இறங்குவதற்கான சரியான நேரம் இதுதான்'' என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை, புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். 

இந்திய வீரர்களின் தாக்குதலின் போது பயங்கரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தினர், இதில் இந்திய ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதனை தொடர்ந்து இந்திய இராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது பல மணி நேரம் நடத்திய துப்பாக்கி சூட்டில் காஸி ரசீத், கம்ரான் ஆகிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MODI PRESS MEET ABOUT NEXT MOVE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->