மோடியின் அடுத்த டார்கெட்.! குஜராத்தில் நடைபெற்ற "வைப்ரன்ட் குஜராத்" நிகழ்ச்சியில் அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் வருடம்தோறும் "வைப்ரன்ட் குஜராத்" என்ற நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இன்று இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று உரையாற்றினார். 

அந்த உரையில்., இந்தியாவின் பிரதமராக பதிவியேற்ற பின்னர் செயல்பாடு., சீர்திருத்தம்., புத்தாக்கம் மற்றும் மீண்டும் செயல்பாடு என்று தாரக மந்திரத்தை முன்வைத்து., அதன் அடிப்படையில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறேன்., எனது நிர்வாகமும் இதனையே பின்பற்றி வருகிறது. 

சென்ற 1991 ம் வருடத்திற்கு பின்னர் தற்போது தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாகவும்., பணவீக்கம் 4.6 விழுக்காடாகவும் இருந்து வருகிறது. அப்போதைய நிலைமைக்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் அதிகளவு உள்ள வேறுபாடுகளை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டும்., இதனை இன்னும் வெற்றிப்பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.  

உலக வங்கியின் தரவரிசை அட்டவணையின் படி வர்த்தகம் செய்ய ஏதுவான உலக நாடுகளில் 152 இடத்தில் இருந்த இந்தியாவை., 77 வது இடமாக இடம் பெற வைத்துள்ளோம். வருகின்ற வருடத்திற்குள் இதனை முதல் 50 வது இடத்திற்குள் எட்டிப்பிடிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்., இதற்க்காக மக்கள் முழுமனதுடன் ஒத்துழைத்து உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 


மேலும்., குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த நரேந்திர மோடி., அந்த மாநிலத்தின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் "வைப்ரன்ட் குஜராத்" மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi next target announced in vibrant gujarat function


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->