பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி! குடியரசு தலைவருடன் சந்திப்பு!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 282 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது 

மக்களவை தேர்தலில் 1984க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையையும் பாஜக இந்த தேர்தலில் பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி எப்போது பதவி ஏற்க போகிறார் என்ற தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது   

இந்தநிலையில், டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிரதமர் மோடி. அத்துடன் 16-வது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பிரதமர் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். 

மேலும் பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தையும்  குடியரசுத் தலைவரிடம் வழங்கினார் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடிக்கு குடியரசு தலைவர் அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi meets president


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->