மாநில மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி திங்கள் கிழமையன்று டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பீகார் மாநில மக்களுக்கு ஒரு பெரிய பரிசினை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் இணைய சேவையை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பீகார் மாநில 45 ஆயிரத்து 945 கிராமங்கள் வைபர் சேவையை உடன் இணைக்கப்படும். 

இந்த நிகழ்வில் 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களை இணையத்துடன் இணைப்பதன் பொருட்டு கிராமத்தின் குழந்தைகள் உலகம் முழுவதிலும் இருந்தும் புத்தகங்களை படிக்க முடியும். அதோடு தகவல்களையும் பெற முடியும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நவீன விவசாய தொழில்நுட்பங்கள் பற்றியும் பீகார் மாநில விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் விவசாய சீர்திருத்தங்கள் குறித்து சிலர் வீண் வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும், விவசாயிகள் இதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை பிரதமர் கூறினார். அதேவேளையில் நிறுவனங்களுடன் சமாதானமாக போவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எளிதாக விற்க முடியும். அதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட இயலும் என்று கூறினார். 

விவசாயிகளின் ஒரு உதாரணத்தை அளித்த பிரதமர் அரிசி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்துடன் சமரசம் செய்து விவசாயிகள் நல்ல வருமானத்தை இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். நிலத்தின் உரிமையாளர் விவசாயி ஆகவே இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi good news for bihar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->