இந்தியாவுக்கு முக்கிய தடையை விதித்த பாகிஸ்தான்., சர்வதேச பிரச்சனையாகும் அபாயம்! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவுவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரின் 370 பிரிவுவை இந்திய ரத்து செய்ததை ஐநா சபையில் கொண்டுவந்து சர்வதேச பிரச்சனையாக்க முன்னெடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு சீனா மட்டுமே ஆதரவளித்த நிலையில் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இதையடுத்து, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையைப் பயன்படுத்துவதில் தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் அறிவியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியிருப்பதாவது, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.  

அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக செல்ல இந்தியா அனுமதி கேட்டது ஆனால் இதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதேபோல குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்தின் விமானமும்  பாகிஸ்தான்   வான்பரப்பில் பறக்கஅனுமதி வழங்க மறுத்துவிட்டது. 

இதையடுத்து , இதுகுறித்து  இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் பேசியதாவது, இந்த விவகாரத்தை சர்வதேச அரங்கில் எழுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. ஒரு தேசத்தின் முதன்மை  தலைவர்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்ட்டவசமானது எனதெரிவித்த அவர், இந்திய தலைவர்களின் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தனது வான் பரப்பில் அனுமதியளிக்காதது இரண்டாவது முறை ஆகும்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால்தான் அனுமதி மறுக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியிருந்தார். இது மிகவும் துரதிர்ஷ்ட்டவசமானது என்று தெரிவித்த விஜய் கோகலே, பாகிஸ்தான் தனது செயல்களின் அபத்தத்தை உணர வேண்டும் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi flight not allowed in pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->