திட்டத்தில் உறுதியாக இருக்கும் பிரதமர்..! வெளியாகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தற்போது இந்தியா முழுவதிலும் ஒரே அடையாள அட்டை., ரேஷன் கார்டு மற்றும் தேர்தல் போன்ற நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஆர்வமாக உள்ள நிலையில்., பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரே நாளில் சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் பாதுகாப்பு துறையின் மத்திய சங்கம் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பேசியிருந்ததாவது., ஒவ்வொரு தொழிலாளர்களும் மாதம் சரியான சமயத்தில் தங்களின் ஊதியத்தை பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒரே நாளில் சம்பளம் இருக்க வேண்டும். 

இந்த சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் மோடி ஆர்வத்துடன் இருக்கும் நிலையில்., தொழிலாளரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக., குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் வருடத்தில் மத்தியில் பாஜக கூட்டணியானது பதவியேற்றத்தில் இருந்து தொடர்ந்து பல சட்ட திருத்தங்களை கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது இந்த சீர்திருத்தத்தினை கொண்டு வருவதற்கு சுமார் 44 சிக்கலாக உள்ள தொழிலாளர் சட்டங்களை கையில் எடுத்துள்ளதாகவும்., தனியார் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது முக்கிய பங்காக உள்ளதாகவும்., தற்போது 90 இலட்சம் பேர் இதில் பணியாற்றி வரும் நிலையில்., வரும் வருடங்களில் 2 கோடி தொகையை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனைப்போன்று அமைப்பு சாரா தொழிற்துறையில் பணியாற்றி வரும் நபர்களுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் செயல்முறையில் பிரதமர் உறுதியாக உள்ளதாகவும்., தொழிற்துறைக்கும் - தொழிலாளர் நலனிற்கும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi confident about one country one day salary


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->