முக்கிய இடத்திற்கு செல்ல மோடி, அமித்ஷா., கூட்டாக தமிழகம் வரவுள்ளனர்!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா ஜூலை 1 ஆம்  தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 28 ஆம் நாளான நேற்று இளம் நீலநிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதரை தரிசிக்க நேற்று மட்டும் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கடும் கூட்ட நெரிசலில் ஏற்பட்டு அதில் சிக்கி 40 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, கூட்டம் குறைந்த பின் கோவிலுக்கு செல்லுமாறு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில், அத்திவரதரை தரிக்க வரும் பக்தர்களுக்கு மத்திய துணை ராணுவ பாதுகாப்பு வழங்க கோரியும், மேலும் மூலவரை தரிசிக்க அனுமதி தர கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் இருதரப்பு வாதங்கள் முடிந்த உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இதனிடையே, அத்திவரதரை தரிசனம் செய்ய பிரதமர் மோடி  நாளை மறுநாள் அதவது 31 ஆம் தேதி பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். இரவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி விட்டு மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை பிரதமர் மோடி தரிசிக்க உள்ளார். பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வருகை தருகின்றனர்.

பிரதர் மோடி வருகையை முன்னிட்டு பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை அத்திவரதரை சுமார் 45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பாதக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi come to tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->