மோடியின் 100 நாள் ஆட்சி எதற்கும் உதவாத ஆட்சி..! வெறித்தனமாக டுவிட் செய்த முக்கிய தலைவர்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பாஜக அரசு  பதவியேற்று நூறு  நாட்கள் ஆகி விட்ட நிலையில் மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள்” ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லையே !  என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Image result for rahul gandhi seithipunal

இந்திய நாட்டின் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-ம் முறையாக பொறுப்பேற்று., 100 நாட்கள் நிறைவடைந்தது குறித்து அந்த கட்சியினர் மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.  இது தொடர்பாக ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் 100  நாள் ஆட்சியில் இந்தியாவில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆட்சி அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டதாக இருப்பதாகவும் பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்க கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  பாஜக பதவியேற்று 100 நாட்கள் ஆகி விட்டது.

மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதும், விமர்சனத்தை தவிர்க்க ஊடகங்கள் மீதான கூடுதல் அடக்குமுறையும் நடை பெற்றுவருகிறது.

சரியான திட்டமிடலும், பயணமும் தேவைப்படும் நிலையில் அது இல்லாத தலைமையும், பொருளாதார சூறையாடலும் தான் தற்போது நடைபெறுகிறது குற்றம்சாட்டி பதிவிட்டுருக்கிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi 100 day rule is non growth country


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->