மக்கள் நீதி மய்யத்துடன் இரண்டு கட்சிகள் கூட்டணி உறுதியானது.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணி போட்டியிடுவது வழக்கம் தான். அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடும் என்றும், இல்லை மூன்றாவது ஒரு கூட்டணியை இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சி கூட்டணியை உருவாக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்திடம் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு கேட்டுக்கொண்டே இருக்கிறார். அதே சமயத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து பச்சமுத்து மகன் கட்சியும் வெளியேறி தனி கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புதிய கூட்டணி கமலை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று மக்கள் நீதி மையத்துடன் இரண்டு காட்சிகள் கூட்டணியை உறுதிசெய்துள்ளன. அனைத்து மக்கள் அரசியல் கட்சியும், தமிழ்நாடு இளைஞர் கட்சியும் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியை உறுதிசெய்துள்ளன.

இந்த இரு கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள்? என்பது குறித்து இரண்டு நாளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM NEW ALLIANCE 2 PARTY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->