தப்பித்து கரையேறிய தகுதி நீக்க எம்.எல்.ஏ.!! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது காலையில் துவங்கியது. முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை துவங்கப்பட்ட நிலையில்., சரியாக 08.30 மணிக்கு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கைக்கு துவங்கப்பட்டது. இந்த தேர்தல் பணியில் தமிழகத்தில் சுமார் 45 மையங்கள் அமைக்கப்பட்டு., 17 ஆயிரம் ஊழியர்கள்., 36 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லலும் நபர்களுக்கு அதிரடி கட்டுப்பாடானது தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., இந்தியளவில் பாரதிய ஜனதா கட்சி 346 இடங்களில் முன்னிலையிலும்., காங்கிரஸ் கட்சி 92 இடங்களிலும்., பிற கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 38 இடங்களிலும்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 1 இடங்களிலும்., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 0 இடங்களிலும்., நாம் தமிழர் கட்சி 0 இடங்களிலும்., மக்கள் நீதி மையம் கட்சி 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் திமுக 13 இடங்களிலும்., அதிமுக 09 இடங்களிலும்., அமமுக 0 இடத்தில் முன்னணியில் உள்ளது. புதுச்சேரியை பொறுத்த வரையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் உள்ளார். இந்த நிலையில்., இந்தியளவில் பாரதிய ஜனதா கட்சியானது தொடர்ந்து முன்னணியில் இருந்து பல வெற்றிகளை., பெரும்பான்மை வாக்குப்பதிவு வித்தியாசத்தில் வெற்றியை கண்டுள்ளது. 

இந்த நிலையில்., தமிழகத்தை பொறுத்த வரையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்., சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களை தக்கவைத்து கொண்டது. இந்த நிலையில்., திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி., அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLA re election aravakurichi candidate senthil balaji won


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->