#BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்குக்குப் பின் மீண்டும் முழு ஊரடங்கு.,? முக ஸ்டாலின் கொடுத்த உறுதிமொழி.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் நாளை முதல் வரும் 24ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் வளாகத்தில் தொழில் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின், "தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்பட கூடிய முழு ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது" என்று உறுதி அளித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mks say about again lockdown in tn issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->