முக ஸ்டாலின் நாளை பங்கேற்க போகும் கூட்டம் எந்த தொகுதி தெரியுமா? உச்சகட்ட பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கூட அரசியல் வாசனை சற்று தூக்கலாகவே இருந்தது.

மேலும், தேசிய அரசியல் கட்சியின் தலைவர்கள் தமிழகம் வந்து பொங்கல் கொண்டாடி சென்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த பொங்கலை தங்களுக்கான பிரச்சாரமாக மாற்றி அமைத்துள்ளனர்.

இதற்கிடையே, திமுக சார்பில் திமுகவினர் மட்டுமே பங்கேற்கும் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது திமுகவின் தேர்தல் பிரச்சார உத்தியாக திமுகவினர் கருதுகின்றனர். இந்த கூட்டங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் மக்களின் குறைகளையும் நேரடியாக கேட்டுப் பெறுகிறார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம்  குரும்பப்பட்டி மகா முனியப்பன் கோவில் எதிரில் உள்ள திடலில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி சட்டமன்ற தொகுதி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியின் கோட்டையாக கருதப்படுகிறது. தமிழக முதல்வரின் தொகுதிக்கே சென்று முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உண்டாகியுள்ளது.

இதற்கு காரணம், அதிமுக அமைச்சர் வேலுமணியின் சட்டமன்ற தொகுதியில் முக ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில், ஸ்டாலினை பார்த்து கேள்வி எழுப்பியதால் அந்த பெண்ணை அடித்து விரட்டினர். அவர் அதிமுக பெண்மணி என்றாலும்., அது மக்கள் கிராம சபை கூட்டம் என்பதால், அவரின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளித்து இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குற்றச்சாட்டை வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKS IN EDAPPADI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->