விஜயகாந்தை உயிரோடு கொலை செய்த முக ஸ்டாலின்.! இணையத்தில் வைரலாகும் காணொளி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மக்களவை தேர்தல் கூட்டணியில் பாஜகவுக்கு 5, பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டு உடன் படுக்கை ஏற்பட்டு உள்ளது.

இந்த கூட்டணியில் தேமுதிக இணையும் என்று அதிமுக-பாஜக தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஆனால், கூட்டணி உடன்படிக்கையில் இழுபறி நிலவி வருகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக-வை இணைக்க, தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தேமுதிக 9 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால், 4 - 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று அதிமுக தெரிவித்து உள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. 

இதேபோல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தேமுதிக-அதிமுக கூட்டணி இழுபறி ஏற்பட்டுள்ளதை தனக்கு சாதகமாக மாற்ற நினைத்த முக ஸ்டாலின் நேற்று திமுக கூட்டணியில் இணைக்க முன்னோட்டமாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவர்களை விஜயகாந்திடம் பேச வைத்தார்.

அப்போதே, திமுக கூட்டணி அழைப்புகவே இந்த சந்திப்பை ஏற்படுத்தி உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இன்று மதியம் முக ஸ்டாலின் அவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரடியாகவே சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சந்திப்பு குறித்து பேசிய முக ஸ்டாலின், ''தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதையையும், அன்பையும், மதிப்பையும் வைத்திருந்த அவர் மறைந்த செய்தி.. (இந்த இடத்தில தலைவர் மறைந்த செய்தி கேட்டு விஜயகாந்த் அவர்கள் என்று கூறுவதற்கு பதிலாக, அவர் மறைந்த செய்தி கேட்டு என்று மொட்டையாக கூறி விஜயகாந்தை கொலை செய்துவிட்டார் முக ஸ்டாலின்) கேட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த அவர், கண்ணீர் மல்க காணொளி வெளியிட்டு இருந்தார். 

அவர் மறைந்த (மீண்டும் மொட்டையாக ''அவர்'' என்று கூறிய ஸ்டாலின் யாரை கொன்றார் என்று யாருக்கும் தெரியவில்லை) செய்திக்கு பின், அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடித்து வந்த அவர், கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய போது அவர் கண்ணீர் விட்ட காட்சிகள் அனைவரின் மனதையும் விட்டு இன்னும் நீங்கவில்லை. 

எனவே, அந்த வகையில் அவர் உடல் நலம் குறித்து நான் நேரில் நலம் விசாரிக்க வந்துள்ளேன். அரசியல் குறித்து பேச வரவில்லை, மனிதாபிமான உணர்வுடன் தான் சந்தித்தேன். உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்தேன். விஜயகாந்த் நல்ல முறையில் தேறி வந்துள்ளார்'' என்று விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், உங்கள் நல்ல எண்ணங்களுக்கு என் பாராட்டு என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். 



 

முக ஸ்டாலின் அவர்கள் பேட்டியின் போது, "அவர்'' என்ற வார்த்தையை தவறான இடத்தில் உச்சரித்து விஜயகாந்தை கொலை செய்த அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin wrong speech about vijayakanth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->