மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி! முக ஸ்டாலின் போட்ட ட்வீட்!  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் 70-வதுது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட அம்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தால் நாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாடி நிகழ்ச்சிகளில் பாஜகவினர் பல ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலேயே ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி  அவர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும். தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்” என்று முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin wish to pm modi birthaday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->