தேர்தலுக்காக அரசின் அறிவிப்பை வரவேற்ற ஸ்டாலின், கொந்தளிக்கும் இளைஞர்கள்!   - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தியது தேர்தலுக்கான அறிவிப்பாக இருப்பினும் வரவேற்கத்தக்கதே. எனினும், முதலமைச்சர் பழனிசாமியின் அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மையை என்றும் மறக்கமாட்டார்கள்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்ற முறை 58 வயதில் இருந்து 59 வயதாக மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோதே 60 வயதாக ஆக்கியிருக்க வேண்டும்.

தற்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் அதைக் கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான பலன்களை எதிர்பார்த்துத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, இப்போதுதான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருக்கிறார். அதே நேரத்தில், படித்து கல்வித் தகுதி பெற்று, தமது எதிர்காலத்தை நினைத்து, மிகுந்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்து, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு எந்த வழியிலும் பறிபோகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதும் அவசியம்!

ஆனால், போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசுவதற்குக் கூட முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமில்லை. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய  பயன்களை அளிக்காமல் ஒருபுறம் நிந்தித்து -  போராடும் அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி, வழிமறித்து, இரவோடு இரவாகக்  கைது செய்து,  அடக்கு முறைகளைக் கையாண்ட  அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மை கொண்ட -  முதலமைச்சர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை  அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.  இப்போதாவது போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வருவாரா?" என முக ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது ஒருபுறம் இருந்தாலும், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி கொண்டு இருக்க, ஒய்வு பெற உள்ளவர்களுக்கு கால நீட்டிப்பை வழங்குவது எந்த வகையில் நியாயம்? தேர்தலுக்காக அரசு ஊழியர்களை பகைத்துக்கொள்ளக்கூடாது என ஸ்டாலின் பார்க்கீற்றாரா என கேள்வி எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin welcomes announcement of retirement age hike to 60


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->