எனது ஆதங்கத்தை, முதலமைச்சர் புரிந்துகொள்ளவில்லை.. மு.க. ஸ்டாலின் அறிக்கை!! - Seithipunal
Seithipunal


எனது ஆதங்கத்தை முதலமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் கழித்தும் உயிரோடு மீட்கப்படாத நிலையில், நாட்டையே சோகத்திலும் குற்ற உணர்விலும் தள்ளிவிட்டுச் சென்றுள்ளான் சுஜித் வில்சன். இச்செய்தியைக் கேள்விப்பட்டதும், 'சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதைப் போல நாமும் துடிக்கிறோம், அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டேன்.

ஒருநாள் கடந்து, இரண்டாவது நாள் ஆனதும், 'நாம் அங்கே போய்ப் பார்த்து அந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லலாம்' என்று நினைத்தேன். ஆனால் இந்த நேரத்தில் சென்றால் அரசியல்ரீதியானதாக ஆகிவிடும், தேவையற்ற கவனச் சிதறல் ஏற்படலாம் என்பதால், சென்னையில் இருந்தபடியே அனைத்தையும் இடையறாது கவனித்து வந்தேன். அமைச்சர்களும், அதிகாரிகளும் பேட்டிகள் கொடுத்தார்களே தவிர, சிறுவனை உயிருடன் மீட்பதற்குத் தேவைப்படும் நகர்வுகள் இல்லை. இறுதியாக உயிரற்ற சடலமாகத் தான் சுஜித் மீட்கப்பட்டான்.

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் சொல்லிவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதியுதவியும் செய்துவிட்டு, புறப்பட்ட நேரத்தில் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டார்கள்.

‘அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, ராணுவ உதவியை விரைந்து பெற்று இருக்க வேண்டும்' என்று எனது கருத்தைச் சொன்னேன்.

எனது ஆதங்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ளவும் இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin statement in tn cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->