எது பெரியது என்று அடித்து காட்டுங்கள்...! மு.க.ஸ்டாலின் அறைகூவல்.!!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்., நாங்குநேரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து., திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்த சமயத்தில் அவர் பேசியதாவது., மு.க.ஸ்டாலின் ஆகிய நான் மக்களின் குறைகளை கேட்டு., அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உள்ளேன். இதனை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நான் மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும். 

edapadi palanisamy,

சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நான் கட்டாயம் இதனை நிறைவேற்ற முழக்கமிடுவேன்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சட்டசபை உறுப்பினர்கள் 122 பேர் உள்ளனர். இவர்கள் தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டதும் இல்லை., பொதுமக்களிடம் பிரச்சனை கேட்டதுமில்லை. இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் இவர்களுக்கு பயமாக உள்ளது. 

இவர்கள் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்க முடியும்? என்பது எனக்கு தெரியவில்லை. தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்லும் பட்சத்தில்., அது பிரச்சனை இல்லை. முதலமைச்சர் என்ற முறையில் சென்றதால் அவரை நான் கேள்வி கேட்டேன். 

ஆனால் அதற்கு பதில் கூறாமல் என்னைப் பற்றி விமர்சனம் செய்தார். நான் துணை முதலமைச்சராக இருந்த போது ஜப்பான் நாட்டிற்குச் சென்று உலக வங்கி நிதி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றம் செய்தேன்., சென்னையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையும் கொண்டுவந்தேன். 

mk stalin,

தற்போதைய ஆட்சியில் எடப்பாடி கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைப்பதற்கு வெளிநாடு சென்றாரா? என்னும் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.. இதற்கு அவர் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். நான் சுவிஸ் நாட்டில் உள்ள வங்கியில் பணம் வைத்திருப்பதாக கூறி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் உள்ள நிலையில்., மத்தியிலும் அதிமுகவிற்கு இணக்கமான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. 

நான் எவ்வளவு பணம் பதுக்கியுள்ளேன் என்று கண்டுபிடித்து, மக்களுக்கு நீங்களே சொல்லி இருக்கலாம். நீங்கள் அதை நிரூபித்தால் நான் எனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்றும்., அவ்வாறு நீங்கள் நிரூபிக்கவில்லை என்றால், நீங்கள் தமிழகத்தை விட்டுச் செல்ல தயாரா? என்றும் பேசியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk stalin speech in nanguneri election meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->