முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் 6 மாதங்கள் மட்டுமே.. தயாரான அடுத்த கட்சி.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் – நம்முடைய தொழிற்சங்க அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞருடைய சிலையை இன்றைக்கு நான் திறந்து வைத்திருக்கிறேன்.

திராவிட இயக்கம் மட்டும் உருவாகாமல் இருந்திருக்குமானால், நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்த அளவுக்கு தொழிலாளத் தோழர்கள் மீது பற்றும் பாசமும் கொண்டவராகத் தலைவர் கலைஞர் இருந்தார்கள்.

மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு விரோதமான அரசாக இருக்கிறது. கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு துரோகம் தான் செய்தது. மத்திய அரசுக்கு ஆதரவாக மாநில அரசும் இருந்து வருகிறது. முதலமைச்சருக்கு தொழிலாளர்கள், விவசாயிகள் என்றாலே பிடிக்காது. ஆனால், நான் ஒரு விவசாயி என்று கூறி வருகிறார். 

நீட் தேர்வினால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அது தற்கொலை கிடையாது. மத்திய, மாநில அரசுகள் செய்த கொலை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனுமதிக்க மாட்டோம் என்றும் அதிமுக பொதுக்குழுவில் பேசினார்கள். தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்தனர். சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், இதுவரை எதுவும் நிறைவேற்றாமல் உள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும்போது நீட் நடத்தப்பட்டது. ஆனால், திமுக தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நீட் தேர்வை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு கருணாநிதி நீண்ட அறிக்கை வெளியிட்டார். முதல் அமைச்சரின் ஆட்டம் எல்லாம் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin speech in edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->