வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முக ஸ்டாலின் செய்த கேவலமான வேலை., கொந்தளிப்பில் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 வருடம் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வன்னியர் தனி இடஒதுக்கீடு போராட்டத்தை பாமக -வன்னியர் சங்கம் நடத்தி வருகிறது. 

சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன் டிசம்பர் 1 முதல் 4-ஆம் தேதி  4 நாட்களுக்கு தொடர் போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் டிசம்பர் 14-ஆம் தேதி போராட்டம், டிசம்பர் 23-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம், டிசம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம், ஜனவரி 7-ஆம் நாள் நகராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் என 6 கட்டங்களாக 9 நாட்கள் வன்னிய மக்களின் சமூகநீதிக்காக தீவிரமாக போராடி வந்தது.

மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, நேற்று தமிழக சட்டப்பேரவையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இது பாமகவின் 40 வருட போராட்டத்துக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி ஆகும்.

தமிழகத்தில் மக்கள் தொகையில் பெரும் இனம் என்றால் அது வன்னியர் இனமே. அதற்கான சமூக நீதியை பெற்று தந்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என்று பாமக அறிவித்து இருந்தது. தற்போது வன்னியர்களுக்கு என்று 10.5 % உள்ஓதுக்கீடு உறுதியாகிதை அடுத்து அதிமுக - பாமக கூட்டணியும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், "வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான். அரசாணை வெளியிடாமல் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்து தான் இதனை நிறைவேற்றுவோம்" என்று பேசியுள்ளார்.

இதற்கு சமூக வலைத்தளம் டிவிட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் கடுமையாக முக ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் கருத்துக்கள் சில.,

ஊராம் வீட்டு நெய்யே., என் பொண்டாட்டி கையே., என்பது போல., 

நாங்கள் தான் வன்னியர் உள் ஒதுக்கீட்டை  அமல் படுத்துவோம் என்கிறார் ஸ்டாலின்.

ஏதோ இவர் போராடி பெற்று தந்தது போல் கேவலமாக வன்னியர் வாக்குக்காக நாடகம் நடத்துவது அசிங்கமா இல்லையா?

ஊராம் வீட்டு நெய்யே., என் பொண்டாட்டி கையே.! என்ற கதையா.. வெட்கமே இல்லையா ஸ்டாலின்? 3 மாததிற்கு மேலாக போராடி வந்தார்கள். அப்போதெல்லாம் வாய் திறக்காமல் மவுனம் காத்தது ஏன்? இடஒதுக்கீடு இப்போது தேர்தல் நாடகம் என்கீர்கள்?


வன்னியர் உள்ஒதுக்கீடு நாங்கள் தான் நிறைவேற்றி தரப்போகிறோம் என்று  உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது Mr.ஸ்டாலின்? போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாயா, இல்லை எங்களுடன் சேர்ந்து போராடினாயா., 

திமுகவை இந்த தேர்தலோடு வேரறுக்க வேண்டும்.

 

10.5 % வாங்குற வரைய கருத்தே சொல்லல.. எதிர்ப்பு வேற... போராட்டம் பண்ணும் போது எல்லாம் என்ன செய்தீர்கள்., எங்கு போயிருந்தீங்க.. ஏன் ஆதரவு தெரிவிச்சி குரல் கொடுக்குறது.. வாயில வாழைப்பழமா வச்சிருந்தீங்க ஓசி சோறுகளா..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin say about vanniyar reservation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->