திமுகவின் தேர்தல் அறிக்கை., முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மார்ச் 11ந் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக மக்களின் மனம் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை என்றும், மார்ச் 11ந் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மார்ச் 11ஆம் தேதி தமிழக மக்களின் மனங்களைக் கவரும் திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன் என்று மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காக மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள இந்த தேர்தல் அறிக்கை 2006-ம் ஆண்டு கருணாநிதி கூறியதைப் போலவே தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலிலும் நாயகனாக விளங்கும் என்று மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin say about dmk manifesto


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->