திமுகவை வீழ்த்த ஆன்மிக அரசியல்., முக ஸ்டாலின் கதறல் பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆன்மிகத்தை காரணம் சொல்லி, சிலர் திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்தலாம் என்று எண்ணுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று ராமநாதபுரம் மாவட்ட திமுகவினருடன் முக ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது திமுக தொண்டர்களுடன் ஸ்டாலின் பேசுகையில், "ஆன்மிகத்தைக் காரணம் காட்டி திமுகவை வீழ்த்திவிடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

பொது மக்களுக்கு சேவை செய்வது தான் மகத்தான ஆன்மிகம் என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு. ஏழைகளை காக்கக் கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள்.

ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். திமுக-வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ஊர் ஊராகச் சென்று அரசு விழாக்கள் நடத்துவதாக சொல்லிவிட்டு அரசியல் பேசி வருகிறார்.

அதிமுகவின் இந்த ஆட்சியில் கமிஷனுக்கு மட்டுமே பணிகள் நடக்கிறது." என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 (முன்னதாக, நடிகர் ரஜினி ஆன்மிக அரசியலை செய்யப்போவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin ramanadhapuram meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->