மத்திய அரசில் இடம்பெறுமா திமுக? -  மகிழ்ச்சியுடன் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், " ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், இல்லையென்றாலும் நாங்கள் அதையெல்லாம் பொருட்படுத்துவதுமில்லை, ஏற்றுக்கொள்வதுமில்லை; மக்களுடைய கணிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம்" என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மத்திய அரசில் இடம்பெறுவது குறித்து மே 23க்கு பிறகு தெரிவிக்கப்படும் எனவும், மே 23ந் தேதி டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என்று உங்களிடம் சொன்னது யார்? என செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கேள்வி கேட்டுவிட்டு, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். 

அடுத்து மத்தியில் அமையும் அரசில் திமுக அங்கம் வகிக்குமா? என கேள்வி கேட்க அதற்கு மே 23க்கு பிறகு தெரிவிக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது புன்னகையுடன் பேசியதை பார்க்க முடிந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin press meet about exit poll


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->