ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்! எதற்காக தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


“திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், என்னைப் பாராட்டி – ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி, விமர்சனங்களையும் முன்வைத்துள்ள ஊடகத்தினருக்கு நன்றி” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இன்று அவரிடம் செய்தியாளர்களின் கேள்வியும், அவரின் பதிலும் பின்வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நானும், கழகத்தின் பொருளாளராக அண்ணன் துரைமுருகன் அவர்களும் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

இந்த ஓராண்டில், ஊடகத்துறையைச் சார்ந்த நீங்கள், எங்களைப் பாராட்டி – ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி, விமர்சிக்க வேண்டிய செய்திகளையும் தெளிவோடு எடுத்துச் சொல்லி, எங்களை ஊக்கப்படுத்தியிருப்பதற்காக முதலில் உங்களுக்கெல்லாம் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில், இதுவரையில் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றியிருக்கும் பணிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்திருக்கிறோம்.
மேலும், 'மக்கள் பணியில் உங்கள் கடமையை தொடர்ந்து ஆற்றிட வேண்டும். வாக்களித்திருக்கும் மக்களுக்கு நன்றி சொல்லும் பணியையும் விரைவாக முடித்திட வேண்டும். தொடர்ந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, அவர்கள் கோரிக்கைகளை, மனுக்களை, ஒரு அலுவலகத்தில் அமர்ந்து அவற்றையெல்லாம் நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அதுகுறித்து எடுத்துச் சொல்லி, அதை நிவர்த்தி செய்யும் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவேண்டும்' என்று முடிவெடுத்திருக்கிறோம்.

செய்தியாளர் : தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஏதாவது சிறப்புச் செய்தி இருக்கிறதா?

கழகத் தலைவர் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுபேற்று ஓராண்டு முடிவுற்றது குறித்து பல ஊடகங்கள் - பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றனர். சிலர் விமர்சித்தும் எழுதி இருக்கின்றார்கள். சிலர் அறிவுப்பூர்வமான கருத்துகளையும் யோசனைகளையும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே, அவற்றையெல்லாம் நான் உள்வாங்கிக்கொண்டு, நிச்சயமாக என்னுடைய கடமையை நான் ஆற்றுவேன்.

செய்தியாளர் : வரும் ஆண்டுகளில் தலைவராக உங்களின் முக்கிய நோக்கம் என்ன? அதேபோல் கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் சந்தித்த சோதனை என்று ஏதாவது இருக்கிறதா?

கழகத் தலைவர் : நான் சோதனைகளை – சாதனைகளையெல்லாம் எடை போட்டுப் பார்ப்பதில்லை. எப்படி எங்களை தலைவர் கலைஞர் அவர்கள் வழி நடத்திக் காட்டி இருக்கின்றாரோ, அந்த வழிநின்று நாங்கள் அவற்றையெல்லாம் துணிவோடு சந்திக்க காத்திருக்கிறோம்" இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Press Meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->