இதை செய்தால் அமைச்சர் பதவி.. ஆசையை தூண்டிய ஸ்டாலின்.! குழப்பத்தில் நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இம்முறை உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது. 

இதனைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். அதன்பிறகு வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். முதல் கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளதால், வேட்பாளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

இந்த உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக தரப்பினர் பல முயற்சிகளை செய்தும் கைகூடவில்லை. வேறுவழியில்லாமல் மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்களிடம் மு.க. ஸ்டாலின் ஒரு பதவி தூண்டிலை வீசியுள்ளார். அதாவது, உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் மாவட்டத்தில் 65 சதவீதம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால், அடுத்த வரப்போகும் திமுக ஆட்சியில் உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளாராம். 

ஆட்சிக்கு வருவது முன்பு மு.க. ஸ்டாலின் அமைச்சர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பது திமுகவினரும் இது நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin plan for local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->