வைகோ கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைகிறாரா? முக ஸ்டாலின் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவை தேர்தலை எதிர்கொள்ள, திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்னியூஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, சாதிக் பாட்ஷா தற்கொலை முதல் ஈழ தமிழர் படுகொலை வரை அனைத்து தானியங்களுக்கு திமுக தான் கரணம் என்று கூறிய மதிமுக போது செயலாளர் வைகோ, அதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுவது பல தரப்பினரையும் விமர்சிக்க வைத்துள்ளது.

மேலும், திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர் போட்டியிடுவதால், விரைவில், மதிமுகவை திமுகவுடன் இணைக்கப் போவதாகவும், திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் பதவி வைகோவுக்கு, முக ஸ்டாலின் வழங்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து பிரபல தமிழ் நாளேடு ஒன்றுக்கு பிரத்தேயமாக பேட்டியளித்த முக ஸ்டாலின் அளித்துள்ள பதிலில், ''வைகோ, திராவிட இயக்கத்தின் போர்க்குரல், திராவிடத்துக்கு எதிரான வஞ்சக சக்திகளை வீழ்த்துவது ஒன்றே அவரின் இலக்கு. எங்களின் தலைவரான கருணாநிதியிடம் அவர் தெரிவித்தது போல, திமுகவுக்கும் எனக்கும் தோள்கொடுத்து உதவுகிறார். மற்றவை உங்கள் யூகங்கள்'' என்று முக ஸ்டாலின் அந்த பெட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin open talk about vaiko


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->