சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நீதிகேட்டு முக ஸ்டாலின் எடுத்த முடிவு.! பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால், ''அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'' என தமிழில் தனது உரையை தொடங்கினார். 

அப்போது, ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு காரணமாக, கஜா புயல் நிவாரணம், ஹெச்ஐவி ரத்த விவகாரம், ஸ்டெர்லைட், பேச அனுமதி மறுப்பு என்று தெரிகிறது.

இந்நிலையில், வெளிநடப்பு செய்த திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''தமிழக அரசு அனைத்திலயும் தோல்வியடைந்துள்ளது. முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்டார். இதன் காரணமாக ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்'' என்று தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலின் தெரிவித்ததாவது, ''கஜா புயல் நிவாரண பணிக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை, தமிழக அரசு பெற முடியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு, மேகதாதுவில் புதிய அணை போன்ற பிரச்சனையிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN NEED CBI INQUIRY FOR JEYALALITHA DEATH


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->